User:Matrix Jayasurya/sandbox
நா.சங்கரலிங்கபுரம்
நா.சங்கரலிங்கபுரம் கிராமம். விளாத்திகுளம் தாலுகா. தூத்துக்குடி மாவட்டம். தமிழ்நாடு மாநிலம். இந்தியா
நா.சங்கரலிங்கபுரம் கிராமம் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவின் தென்பகுதியில் பாண்டிய,நாயக்க மன்னர்கள் ஆண்ட நாட்டில் எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கிராமம்.
தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது.
இங்கு பிரதானத்தொழில் விவசாயம்,ஆடு,மாடு வளர்ப்பு போன்ற இயற்கை சார்ந்த தொழில்கள்.
இப்பகுதி முழுவதும் மழையை நம்பி பாசனம் பெறும் மானாவாரி கரிசல் நிலப் பகுதிகள் கொண்டது.
நன்செய்,புன்செய் என்ற இரு பாசன நில முறைகளில் விவசாயம் நடைபெறுகிறது.
மக்காச்சோளம்,மல்லி,மிளகாய், உளுந்து,பாசிப்பயறு ஆகியவை முக்கிய பயிர்களாக பயிரிடப்படுகின்றன.
இந்த கிராமத்தில் முக்கிய நீராதாரமாக ஊரின் மேற்கு பகுதியில் பேராக்குடி கண்மாயும்,ஊரின் வடக்கு பகுதியை ஒட்டி ரெங்கம்மாள் ஊரணியும் அமைந்துள்ளது.
இங்கு இந்து,கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இனமக்கள் வாழ்கின்றனர்.
அவர்களுள் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் கம்மவார் நாயுடு இனமக்கள்.
இவர்களில் பெரும்பலானோர் விவசாய பெருங்குடி மக்களாகவும், நிலக்கிழார்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர்.
இளைஞர்கள் பெரும்பலானோர் நன்கு கல்வி பயின்று இந்தியாவின் பல நகரங்களிலும் உலகின் பல நாடுகளிலும் பணிபுரிகின்றனர்.
இவர்கள் வைணவ சமயத்தை போற்றி வளர்க்கின்றனர்.
ஊரின் தென்மேற்கு மூலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
அங்கு ஆனி மாதம் வருஷாபிஷேகம் வருடந்தோறும் சிறப்பாக நடக்கிறது.
மார்கழி,புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் ஊரின் வட பகுதியில் கண்ணண் கோயில் ஒன்றும் உள்ளது.
சங்கரலிங்கபுரத்தில் சட்டம்,ஒழுங்கை பாதுகாக்க காவல்நிலையம் ஒன்றும்,தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி,ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஆகியவையும் அமைந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் ஸ்பின்னிங் நூற்பாலை ஒன்றும் உள்ளது.