விநயம்
விநயம் ("Vinaya"), (பாளி மற்றும் சமசுகிருதம்: विनय) என்பது பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான துறவற ஒழுக்க நெறிமுறைகளை விளக்குகிறது. பௌத்த தர்மத்தில் துறவு பூண்டவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான விதிகள், துறவி சமூகத்திற்கான நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கான கதைகள் மூலம் விளக்குகிறது.[1]. இவ்விதிமுறைகள் விநய பீடகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது[2].
கௌதம புத்தர் காலத்திற்குப் பின்னர் விநய மரபின் பௌத்த தத்துவச் சிந்தனைப் பள்ளிகள் தேரவாதம், (இலங்கை & தென்கிழக்கு ஆசியா), மூலசர்வஸ்திவாதம் எனும் திபெத்திய பௌத்தம் (திபெத்து, இமயமலை பகுதிகள்) மற்றும் தர்மகுப்தகம் (கிழக்கு ஆசியா)[3] என மூன்றாகப் பிரிந்தது.
இந்தியாவில் பௌத்த விநயம் ஐந்தாகப் பிரிந்தது. அவைகள் காசியபியா, மகாசம்கிகா, மகீசசகா, புத்கலாவாதம் மற்றும் சர்வாஸ்திவாதம் ஆகும்.[2][4]
விநய பீடகம்
[தொகு]விநய பீடகம் பௌத்த துறவற விதிகளின் தொகுப்பாகும். மேலும் இது பௌத்த நியமன உரையான திரிபீடகத்தின் மூன்று பகுதிகளில் ஒன்றாகும்.
நோக்கம்
[தொகு]விநயாத்தின் முதன்மை குறிக்கோள் பௌத்த சங்கத்திற்குள் (துறவி சமூகம்) நல்லிணக்கம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதும், பாமர மக்களுடனான அதன் உறவை ஒழுங்குபடுத்துவதும் ஆகும்.
தோற்றம்
[தொகு]கௌதம புத்தர் காலத்தில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டது. மேலும் அவை "தீய நடத்தையை" நீக்கி,தர்மத்தைப் பின்பற்றுபவர்களை "அறிவுறுத்த" நோக்கமாகக் கொண்டுள்ளது[5] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schopen, Gregory (2004). "Vinaya". MacMillan Encyclopedia of Buddhism 1. New York: MacMillan Reference USA. 885–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865719-5.
- ↑ 2.0 2.1 The 17th Karmapa Orgyen Trinley Dorje. "The development of the Vinaya rules for monastics and the Pratimoksha Sutra precepts". August 2022. Transcribed by Adele Tomlin, Dakini Translations, 02 September 2022.
- ↑ Dharmaguptaka
- ↑ Keown, Damien. Dictionary of Buddhism. 2003. p. 220.
- ↑ Access to Insight: Vinaya Pitaka: The Basket of Discipline
.