குப்தப் பேரரசு என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது அதன் உச்சபட்ச நிலையின் போது, தோராயமாக பொ.ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தை உள்ளடக்கியிருந்தது. பிற வரலாற்றாளர்கள் இதன் பின்னர் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும், சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். மேலும்...
சுபான்சூ சுக்லாஇந்திய விமானப்படையின் பரிசோதனை விமானியாவார். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ஆக்சிம் விண்வெளி நிறுவனத்தின் ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் 2025 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,73,681 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.